வரும் வாரம் வெளியாகவுள்ள இருமுகன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று இத்திரைப்படத்தின் இயக்குனார் ஆனந்த் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி விபரம் வருமாறு:
இந்த திரைப்படத்தில் விக்ரம் அகிலன் என்னும் 'ரா' அதிகாரி மற்றும் 'லவ்' என்னும் விஞ்ஞானி ஆகிய இரு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். அகிலன் கதாபாத்திரம் கூட எந்த நடிகர் வேண்டுமானாலும் ஏற்று நடித்துவிடலாம். ஆனால் 'லவ்' கதாபாத்திரத்தை விக்ரம் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது. அந்த அளவுக்கு தனித்தன்மை வாய்ந்த அந்த கதாபாத்திரத்தை விக்ரம் சிறப்பாக செய்துள்ளார்.
படத்தின் ட்ரைலரை பார்த்த அனைவரும் 'லவ்' கதாபாத்திரம் ஒரு திருநங்கை என்று தவறாக எண்ணி விட்டனர். அது ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். அனைவரும் விரும்பும் வகையில் அதை நான் உருவாக்கியுள்ளேன். லவ் கதாபாத்திரம் எந்த நேரத்தில் என்ன செய்யும் என்று யாராலும் யூகிக்க முடியாது.
சண்டைக்காட்சிகளை பொறுத்த அளவில் கதையுடன் இணைந்து செயல்படுமாறு அமைக்கப்பட்டுள்ளது.ரவி வர்மா மற்றும் அன்பறிவ் ஆகிய இருவரும் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
நயன்தாரா மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தமீன்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரையில் ஏன் கருப்பு இசை வெளியீட்டு விழா?

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu

அடுத்த ஒரு வாரத்திற்கு.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?

தேசிய தகவல் தொடர்பு மையத்தில் விஞ்ஞானி பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


